×

மெகபூபா முப்தி விடுதலை: மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,:மெகபூபா முப்தி 14 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது: மெகபூபா முப்தி 14 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் தடைப்பட்ட அனைத்து ஜனநாயக நடைமுறைகளும் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் முகநூலில் கருத்து கூறியுள்ளார்.


Tags : Mehbooba Mufti ,release ,prisoners ,MK Stalin , Mehbooba Mufti, Liberation, MK Stalin, insistence
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்