×

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் விலகல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத் தலைவர்களான மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் விலகியுள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாத நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்புகளில் இருந்து மகேந்திரன் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் விலகியுள்ளனர். கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். கட்சி, தனது இத்தனை பெரிய தோல்விக்கு பிறகும் தலைவர் கமல்ஹாசனின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை என மகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்தவரைக்கும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கமல்ஹாசன் தெரிவித்து வந்தார். ஆனால் மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரைக்கும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் நீதி மய்யம் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.
இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர்களாக இருந்த மகேந்திரன் மற்றும் பொன்ராஜ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மகேந்திரனை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொடக்கத்திலிருந்தே அந்த கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தார். இந்த நிலையில் கட்சியினுடைய இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு பொறுப்பில் இருந்து விலகுவதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்தது எதுவும் நிறைவேறவில்லை என அதிருப்தியை இந்த கடிதத்தின் வாயிலாக மகேந்திரன் கமல்ஹாசனுக்கு தெரிவித்திருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்தவரைக்கும் எதிர்கட்சியாகவோ அல்லது மூன்றாவது பெரிய கட்சியாகவோ தமிழகத்தில் இந்த தேர்தலுக்கு பிறகு இருக்கும் என்று கமல் எதிர்பார்த்திருந்தார். அதையொட்டி தான் பல்வேறு முக்கியமான நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்திற்காக தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலிலும் களத்தில் நின்று போராடினார்கள். ஆனால் மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தோல்வியும் பெரிய அளவில் ஏற்பட்டிருப்பதன் காரணமாக பொன்ராஜும் கட்சி பதவியிலிருந்து தன்னை விடுவித்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் தான் பொன்ராஜ் மற்றும் மகேந்திரன் இருவரும் துணை தலைவர் பதவிகளில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்….

The post மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் விலகல் appeared first on Dinakaran.

Tags : Vice Presidents ,Mahendran ,Ponraj ,People's Justice Center ,CHENNAI ,vice-presidents ,Dinakaran ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்