மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி பணிகளிலும், பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் தொடர்ந்து பங்கெடுத்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று காலை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ‘கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>