×

டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சியின் விற்பனை உலக அளவில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை..!

சென்னை: உலக அளவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் புகழ்பெற்ற உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டான டிவிஎஸ் அப்பாச்சி-யின் (TVS Apache) விற்பனை எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதைக் கொண்டாடுகிறது. 2005-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அபாச்சி தொடர் வாகனங்கள், நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்ட் ஆக திகழ்கிறது. இது உலக சந்தைகளில் மிகப்பரவலாக, வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.

இந்த மைல்கல் சாதனை குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கே.என்.ராதாகிருஷ்ணன் (K.N. Radhakrishnan, Director & Chief Executive Officer, TVS Motor) கூறுகையில், “எங்களது பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டான டிவிஎஸ் அப்பாச்சி 40 லட்சம் என்ற உலகளாவிய விற்பனை எண்ணிக்கை மைல்கல்லை எட்டும் இந்த நாள், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான நாளாகும். பல ஆண்டுகளாக, இளம் மற்றும் துடிப்புள்ள வாகன ஓட்டிகள், செயல்திறன் சார்ந்த, பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் விளைவாக, டிவிஎஸ் அபாச்சி (TVS Apache) பிராண்ட் உலக அளவில் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பெயரையும் புகழையும் பெற்றது. அபாச்சி மோட்டார் சைக்கிள்களின் தளம் நிறுவனத்தின் தொழில்நுட்ப வலிமையை எடுத்துக் காட்டுகிறது. இது பல வருட அனுபவத்தையும் ரேசிங் எனப்படும் பந்தய பாரம்பரியத்தையும் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. 160 சிசி முதல் 310 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களின் வரம்பில், பிரீமியமயமாக்கலில் நாங்கள் கவனம் செலுத்தியதில் இந்த வாகனப் பிரிவில் பல முதல் அம்சங்களை எங்களால் வழங்க முடிந்தது. மேலும் ஆர்டி-எஃப்ஐ இன்ஜின் தொழில்நுட்பம்,

ஜிடிடி (Glide Through Technology), ரைடு பயன் முறைகள், ஸ்மார்ட் கனெக்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்ட மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்” என்றார். ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில், இந்த மைல்கல்லை அடைவதற்கான எங்களது பயணம் டிவிஎஸ் அபாச்சி-யை உண்மையான உலகளாவிய பிராண்டாக மாற்றுவதற்கான முன்மாதிரியான முயற்சிகளால் ஆனதாக அமைந்திருந்தது. இந்த மைல்கல், எங்களது விவேகமான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறந்த தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். என்றார்.

உலகளாவிய விற்பனையில் 4 மில்லியன் என்ற மைல்கல் சாதனையைக் கொண்டாடும்  வகையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது டிவிஎஸ் அபாச்சி வாடிக்கையாளர்களுடன் இணைந்து 957 அடி நீளமுள்ள ’பல வண்ண சதுர கொடியை” உருவாக்கியுள்ளது. உலகளவில் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட அவர்களது படங்களை ஆதாரமாகக் கொண்டு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் கொடியானது வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் அபாச்சி மீதான அன்பு மற்றும் பிராண்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை,  நன்றியின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது.

2,000-க்கும் மேற்பட்ட படங்களுடனான பலவண்ண சதுர கொடியானது, டி.வி.எஸ் மைசூர் தொழிற்சாலையில் ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்டது.  மிக நீளமாக உருவாக்கப்பட்ட பல வண்ண சதுர கொடி என்ற பெருமையைப் பெற்றிருப்பதால் இம்முயற்சியானது  ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரு சாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டான டிவிஎஸ் அபாச்சி- சீரிஸ், நேக்ட் மற்றும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் (Naked and Super Sports) என இரண்டு பிரிவுகளில் வருகிறது. டிவிஎஸ் அபாச்சி- ஆர்.டி.ஆர் 160, டிவிஎஸ் அபாச்சி- ஆர்டிஆர் 160 4 வி,

டிவிஎஸ் அபாச்சி- ஆர்டிஆர் 180 மற்றும் டிவிஎஸ் அபாச்சி- ஆர்டிஆர் 200 4 வி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆர்டிஆர் (ரேசிங் த்ராட்டில் ரெஸ்பான்ஸ்) தொடர் நேக்ட் மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் தற்போது தயாரித்து வழங்கப்படும் வாகனங்கள் ஆகும். சூப்பர் ஸ்போர்ட் பிரிவில், டிவிஎஸ் அபாச்சி- ஆர்ஆர் 310 (ரேஸ் பிரதி - Race Replica) 2017 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் டிவிஎஸ் பிராண்ட் சூப்பர் பிரீமியம் பிரிவில் முதன்முதலில் நுழைந்தது. இது ஒரு வலிமையான, கவர்ச்சிகரமான வடிவமைப்போடு கூடிய அதி உன்னத செயல்திறன் மற்றும் வாகன செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.

டிவிஎஸ் அபாச்சி- ஆர்ஆர் .310 மோட்டார் சைக்கிள், த்ரோட்டில்-பை-வயர் தொழில்நுட்பம், நான்கு சவாரி முறைகள் (four ride modes), அதிநவீன டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்னெக்ட்-டால் செயல்படுத்தப்படும் 5 அங்குல செங்குத்து டி.எஃப்.டி (state-of-art TVSSmartXonnect enabled5’’ Vertical TFT) மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சிறந்த ரேஸ் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. டிவிஎஸ் அபாச்சி தொடர் வாகனங்கள் தனது வாடிக்கையாளர் தளத்துடன் இணைந்திருக்க தொடர்ச்சியான பல வகையான முன்முயற்சிகளை மேற்கொண்டு செயல்பட்டுள்ளது.

அபாச்சி உரிமையாளர்கள் குழு (Apache Owners Group - AOG) என்பது செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுதலில் தங்கள் ஆர்வத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஒரே எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவாகும். இந்த சமூகக் குழு இந்தியாவின் 52 நகரங்கள் மற்றும் முக்கிய சர்வதேச சந்தைகளில் 30 ஆயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அபாச்சி பந்தய அனுபவம் (அபாச்சி- ரேசிங் எக்ஸ்பீரியன்ஸ் - Apache Racing Experience ARE) என்பது 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தளமாகும். அபாச்சி உரிமையாளர்களுக்கு டிவிஎஸ் ரேசிங் சாம்பியன் வாகன ஓட்டிகளின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் ரேசிங் மரபணுவை மேம்படுத்துவதற்கான பிரத்தியேக முதல் அனுபவத்தைப் பெறுவதற்கான ஒரு தளமாக இது தொடங்கப்பட்டது.

மேலும், அபாச்சி- புரோ செயல்திறன் (ஏபிபி) மற்றும் அபாச்சி- புரோ செயல்திறன் எக்ஸ்ட்ரீம் (ஏபிபிஎக்ஸ்) (Apache Pro Performance - APP and Apache Pro Performance Extreme - APPX) ஆகியவற்றின் கீழ் பரபரப்பான ஸ்டண்ட் ஷோக்களை இந்த பிராண்ட் ஏற்பாடு செய்கிறது. இது பரவலான வாடிக்கையாளர் ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. 2019-ம் ஆண்டில், டிவிஎஸ் நிறுவனம் தனது முக்கிய நிகழ்ச்சியான டிவிஎஸ் மோட்டோ சோல் (TVS MotoSoul) என்ற நிகழ்ச்சியின் 1 வது பதிப்பை நடத்தியது.  இது உலகெங்கிலும் உள்ள அபாச்சி உரிமையாளர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுடன் இணைந்திருப்பதற்கும், வாடிக்கையாளர்கள் செயல்திறன் மிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுதலில் உள்ள தங்கள் ஈடுபாட்டையும், அன்பையும், ஆர்வத்தையும் கொண்டாடுவதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்டது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பற்றி….:
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி நிறுவனமாகும். இது 8.5 பில்லியன் டாலர் மதிப்புடைய டிவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். வாகனத் துறையில் சாதனை முன்னேற்றத்தை நோக்கி இந்நிறுவனம் பயணிக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கை, நன் மதிப்பு, வாடிக்கையாளர்களின் ஆதரவு, அர்வம், மற்றும் துல்லியத் தன்மை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நவீன தயாரிப்புகளை மிக உயர்ந்த தரத்தில்,

புதிய தொழில் நுட்பத்தில் நீடித்த மற்றும் நிலைத்த தன்மையுடனான நடைமுறைகளின் அடிப்படையில் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள எங்களது மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையையும் அனுபத்தையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒட்டுமொத்த தர மேலாண்மைக்காக (டிக்யூஎம்) வழங்கப்படும் மிக உயர்ந்த மதிப்பு மிக்க டெமிங் பரிசை வென்ற ஒரே நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மட்டுமே. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகள் சம்பந்தப்பட்ட அந்தந்த பிரிவுகளில் முன்னணியில் இருப்பது,

கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஜிடி பவர் ஐக்யூஎஸ் மற்றும் அப்பீல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஜேடி பவர் - திருப்திகரமான வாடிக்கையாளர் சேவை (ஜேடி பவர் கஸ்டமர் சர்வீஸ் சேடிஸ்ஃபேக்ஷன்) ஆய்வில் கடந்த 4 ஆண்டுகளாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு என்ற www.tvsmotor.com இணையதளத்தைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : TVS Apache , TVS 'Apache sales reach new milestone globally ..!
× RELATED டிவிஎஸ் அப்பாச்சி