×

டிவிஎஸ் அப்பாச்சி

டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சி ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 160 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அதிக இன்ஜின் திறனுக்காக, ஆர்டிஆர் 160 ஒரு கிலோவும், ஆர்டிஆர் 180 2 கிலோவும் எடை குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் டூயல் சானல் ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச், ஸ்மார்ட்எக்சோனெக்ட் டிஎம், எல்இடி ஹெட்லாம்ப் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதுதவிர, ரெயின், அர்பன் மற்றும் ஸ்போர்ட் என 3 ரெய்டிங் மோட்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்டிஆர் 160ல் 159.7 சிசி ஏர் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 16.04 பிஎஸ் பவரையும் 13.85 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். துவக்க ஷோரூம் விலை ரூ.1.18 லட்சம். ஆர்டிஆர் 180 177.4 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் கொண்டது. இது அதிகபட்சமாக 17 பிஎஸ் பவரையும் 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். துவக்க ஷோரூம் விலை ரூ.1.31 லட்சம்….

The post டிவிஎஸ் அப்பாச்சி appeared first on Dinakaran.

Tags : TVS ,Apache ,TVS Apache ,Dinakaran ,
× RELATED நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு