×

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாமல் படுத்துக்கொண்டும், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரேனா தொற்று காரணமாக அண்ணா பல்கலை கழக இறுதி ஆண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. எனவே இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தேர்வை எழுதினர்.

எனவே தேர்வு சமயத்தில் மாணவர்கள் அண்ணா பல்கலை கழகம் அறிவித்த முறையடி எழுதாமல் படுத்துக் கொண்டும், டீக்கடையில் நின்றவாறும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மொபைல் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் ஆன்லைன் வழியில் தேர்வுகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Anna University Announcement , Engineering, Final Semester, Exam, Students, Absent
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் களமிறங்கினர்