×

பிரதமர் மோடி மாதிரியான ஒரு தலைவரால்தான் நாடு முன்னேற முடியும்.. பாஜக மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை: நடிகர் குஷ்பூ பேச்சு

டெல்லி : டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய செயலாளர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் நடிகை குஷ்பூ பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். நடிகை குஷ்பூவிற்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கி குஷ்பூவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு, நாட்டின் நன்மைக்காக பாஜகவில் இணைந்தேன். பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.எனது கடமையை முழுமையாக செய்வேன். மோடி இந்தியாவை சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார். பிரதமர் மோடி மாதிரியான ஒரு தலைவரால்தான் நாடு முன்னேற முடியும். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன்.மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு. பாஜக மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.நாட்டிற்கு எது நல்லது என தெரிந்துக் கொண்டதால் பாஜவில் இணைத்துள்ளேன்.கட்சியில் தான் மாற்றமே தவிர எனது கொள்கையில் மாற்றம் இல்லை. பாஜக அரசின் ரஃபேல் விவகாரத்தை ராகுல் காந்தி எதிர்த்ததால் நானும் எதிர்த்தேன். எதிர்கட்சி என்பதால் வேறு வழியில்லாமல் பாஜகவுக்கு எதிராக பேசினேன், என்று தெரிவித்தார்.

Tags : Modi ,country ,Khushboo ,BJP , Interview with Prime Minister Modi, BJP, Actor Khushboo
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...