×

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூசணிக்கு விலையில்லை: விவசாயிகள் கவலை-சாகுபடி செலவுகூட கிடைக்கவில்லை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால், பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் கலையில் உள்ளனர்.ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு, சுற்றுவட்டாரத்தில் உள்ள தங்கச்சியம்மாபட்டி, விருப்பாட்சி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பூசணிக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவர்.

இவைகளை வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வர். கொரோனா ஊரடங்கால் வெளிமாநில வியாபாரிகளின் வருவதில்லை. இதனால், மார்க்கெட்டில் பூசணிக்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால், பூசணிக்காய்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.20க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது ஒரு கிலோ பூசணி ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது தற்போது பூசணி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் வெளி மாநில வியாபாரிகள் யாரும் மார்க்கெட்டுக்கு வராததால் பூசணி விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பயிரிட்டு, அறுவடை செய்த செலவுகளை கூட சமாளிக்க இயலவில்லை என்றார்.

Tags : area ,Ottanchattiram , Ottansattram: Outside traders did not come to the Gandhi Vegetable Market in Ottansattram.
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி