×

காதல் திருமண சர்ச்சை.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் சேர்ந்து வாழவே சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைப்பு!!...

சென்னை : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தந்தது.  கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சவுந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் சவுந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1ம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி பிரபுவும் சவுந்தர்யாவும் திருமணம் முடித்ததாக அவர்களின் புகைப்படம் வெளியானது. சவுந்தர்யா வீட்டில் பெண் தர மறுத்ததால், வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்க வேண்டும். கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறை சாமிநாதனை பொது இடத்தில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தபட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தால். அதில் படிக்கும் பெண்ணிடம் எம்.எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவரது தந்தையையும் நேரில் இன்று ஆஜர்படுத்துமாறு கள்ளக்குறிச்சி தியாகதுருகம் போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் படி தற்போது, எம்.எல்.ஏ பிரபுவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சௌந்தர்யா தனது தந்தையுடன் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம் என கால அவகாசம் வழங்கினர்.தந்தையுடன் பேசிய சவுந்தர்யா, நீதிபதி முன்பு தனது கணவர் பிரபுவுடன் சேர்ந்து வாழவே விருப்பம் தெரிவித்தார். மேலும் முழு மனதுடன் எம்எல்ஏவை திருமணம் செய்து வைத்திருப்பதாகவும் தம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் சவுந்தர்யா வாக்குமூலம் அளித்தார்.  இதையடுத்து கணவருடன் வாழ சவுந்தர்யாவுக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.


Tags : MLA ,Saundarya ,Kallakurichi ,Prabhu , Romantic marriage, forgery, MLA Prabhu, Saundarya, preference
× RELATED உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள்...