போதைப்பொருள் கடத்திய வழக்கில் நைஜீரிய வாலிபர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்வூ சைமன் ஒபிண்ணா (30), மதுரவாயலை சேர்ந்த குமரேசன் (26), ஆவடியை சேர்ந்த அருண் திவாகர் (33) ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு போரூர் பைபாஸ் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். அங்கு 250 கிராம் கோகைன் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததால், இவர்களை போரூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு நீதிமன்ற நீதிபதி வி.தேன்மொழி முன்பு நடந்தது. அரசு வழக்கறிஞர் செந்தில் மூர்த்தி ஆஜராகி வாதாடினார். 3 பேர் மீதான குற்றச்சாட்டு   நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 3 பேருக்கும் சேர்த்து மொத்தம் ₹10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

>