×

கேரளாவில் இருந்து மேகமலைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்

வருசநாடு: கடமலை- மயிலை ஒன்றிய மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் மேகமலை வருஷநாடு உள்ளிட்ட வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசரடி, இந்திராநகர், வெள்ளிமலை, நொச்சிஒடை பொம்மராஜபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் மாலை 6 மணிக்கு பின்பு வனத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது பணிகளை 5 மணிக்குள் செய்து விட்டு அந்தந்த கிராமங்களுக்கு விரைந்து சென்று வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் தெரிவித்ததாவது: கேரளா மாநிலத்தில் இருந்து காட்டு யானைகள் அதிகளவில் மேகமலை வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் மலைக்கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் இரவு முதல் அதிகாலை வரை யானைகள் உலாவி வருகின்றன. எனவே பொதுமக்கள் மாலை 6 மணிக்கு பின் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்துள்ளதுடன், இரவுநேர பயணத்தை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளோம்’ என்றனர்.



Tags : Kerala ,Meghamalai , In Kerala, wild elephants migrating to Meghamalai, public fear
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...