×

வழிப்பறி வாலிபர்கள் 2பேர் கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி எம்ஜிஆர் நகர், மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராஜம் (39). மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரன்ட்டில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற சுமதி, மாலை 5 மணியவில் வீட்டுக்கு புறப்பட்டார். பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 பேர், மொபட்டை இடித்து தள்ளிவிட்டு, ராஜம் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.

புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில்  உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செங்கல்பட்டு மேட்டு தெருவை சேர்ந்த விஜய் (20), கலத்துமேட்டு தெரு உதயகுமார் (21) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Tags : teenagers , 2 teenagers arrested
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு