×

காஞ்சி முன்னாள் மாவட்ட தலைவர் சக்கரபாணி ரெட்டியார் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி ரெட்டியார் மறைவுக்கு கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.சக்கரபாணி ரெட்டியார் உடல் நலக்குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நீண்ட காலமாக காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக கடும் பணியாற்றியவர். கட்சி தலைமையின் நம்பிக்கையைப் பெற்று காங்கிரஸ் கட்சி இட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டவர்.

அவரது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமி ழக காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Chakkarapani Rettyar ,Kanchi ,KS Alagiri , Former Kanchi District Chairman Chakkarapani Rettyar passes away
× RELATED காஞ்சி, செங்கை மாவட்டத்தில் கலைஞரின்...