விரைவாக விக்கெட்கள் வீழ்வது பின்னடைவை ஏற்படுத்துகிறது. கடந்த 3 போட்டிகளில் எங்களால் நல்ல தொடக்கத்தை பெற முடியவில்லை. ஜோஸ் பட்லர் ஆரம்பத்திலும், ஜோப்ரா ஆர்ச்சர் முடிவிலும் ஆடும் வகையில் மற்ற வீரர்களும் ஆட வேண்டும். அக்.10ம் தேதி வரை பென் ஸ்டோக்ஸ் அணிக்கு வர மாட்டார். அந்த நாள் தொலைவில் இல்லை. அதே நேரத்தில், அவர் வருவதற்குள் சில வெற்றிகளையும், வேகத்தையும் நாங்கள் பெற்றாக வேண்டும்.
அதற்காக பயப்பட வேண்டிய அவசியமும் இருப்பதாக நினைக்கவில்லை. எங்கள் திட்டங்களை சரியாக அமல்படுத்தவேண்டும், நீண்ட நேரம் நன்றாக விளையாட வேண்டும். கடந்த 3 போட்டிகளை நாங்கள் இழந்தது நல்லதல்ல. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப, உத்வேகம் வேண்டும்.