×

ரத்த நகரமாக மாறுகிறது ஐடி நகரம்; பழிக்குப்பழி கொலை பெங்களூரு நம்பர்-1: இரண்டாவது இடத்தில் டெல்லி

புதுடெல்லி: நாட்டிலேயே பழிக்குப்பழி வாங்குவதற்காக கொலை செய்யப்படுவதில் பெங்களூர் முதலிடம் வகிப்பதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகி உள்ளது. ஆதாயத்துக்காகவும், பழிக்குப் பழி வாங்கவும், சொத்துக்காக, காதலுக்காக, கள்ளக் காதலுக்காக கொலைகள் நடப்பது நாட்டில் சமீப காலமாக அதிகமாகி வருகிறது. இவற்றில், பழிக்குப் பழியாக அதிகளவில் கொலைகள் செய்யப்படும் நகரமாக பெங்களூரு இருக்கிறது என்று அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பெரிய தாதாக்கள், துப்பாக்கிகள் சகிதமாக வலம் வருகின்ற மும்பையை கூட இது தூக்கி சாப்பிட்டு விட்டது.

கடந்த 2019ம் ஆண்டு பெங்களூருவில் பதிவான 210 கொலைகளில் 106 கொலைகள் பழிவாங்குவதற்கான நோக்கத்தோடு செய்யப்பட்டு உள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், டெல்லியில் கடந்த 2019ம் ஆண்டு மொத்தம் 505 கொலைகள் பதிவாகி உள்ளது. இதில், 87 கொலைகள் பழிக்கு பழி வாங்குவதற்காக செய்யப்பட்டுள்ளன. 75 சதவீத கொலைகள் சொந்த பகை அல்லது பழிக்கு பழி வாங்குதல்  மற்றும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகளாக உள்ளன. கொலை செய்தவர்கள்

இது குறித்து டிஜிபி குருபிரசாத் கூறுகையில், ‘‘தனிப்பட்ட பகையால் பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன. நிலம், பெண் மற்றும் பணத்தை குறிக்கோளாக கொண்டும் கொலைகள் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட பகை காரணமாக சொந்த குடும்பங்கள்,  நண்பர்களிடையே கொலைகள் நிகழ்கின்றன. பணம், நகைக்காக நடக்கும் கொலைகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் விசாரணை மற்றும் கொலையாளியை கைது செய்வது கடினமானது கிடையாது. நோக்கம் கண்டறியப்பட்டவுடன் குற்றவாளியை கைது செய்வது எளிதாகும்,” என்றார்.


Tags : blood city ,Murder ,Revenge ,Bangalore ,Delhi , ID city becomes blood city; Revenge Murder Bangalore No.1: Delhi in second place
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...