×

கேரளாவில் பரபரப்பு கொரோனாவில் இறந்தவர் உடலை மாற்றி தந்த அரசு மருத்துவமனை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் வெங்கானூர் வெண்ணியூர் நெல்லிவிளா கல்லுக்குத்திவிளா வீட்டை சேர்ந்தவர் தேவராஜன் (57). கடந்த 9 நாளாக அப்பகுதியில் அரசு மருத்துவமனையில், சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. அதன்படி அன்று மாலை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொரோனோ நெறிமுறைகளுக்கு இணங்க உடல் பிளாஸ்டிக் கவரால் போர்த்தப்பட்டு இருந்தது. இதனால் உறவினர்கள் சரியாக பார்க்கவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த அவரது மகன் அனூப், இறுதி சடங்கிற்கு முன்பு தந்தையின் முகத்தை பார்க்க விரும்பினார். இதையடுத்து தேவராஜனின் முகத்தில் சுற்றியிருந்த துணி, பிளாஸ்டிக் கவர் அகற்றப்பட்டது.

அப்போது உடலில் ​​சுருக்கங்கள், நிறமாற்றம் இருப்பதை கவனித்தார். இந்த தகவலை உறவினர்களிடம் கூறினார். டயாலிசிஸ் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து உடல் தகனம் செய்யப்பட்டது. இருப்பினும் அனூபினுக்கு சந்தேகம் தீரவில்லை. உடனே விழிஞ்ஞம் சுகாதார ஆய்வாளரிடம் இதுகுறித்து கூறினார். இதையடுத்து விசாரணை நடந்தது. அப்போது உடல் மாறியிருப்பது தெரியவந்தது. சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத இன்னொருவரது உடல் என்பது தெரியவந்தது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சவக்கிடங்கு பணியாளர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று தெரிகிறது. இது குறித்து ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசும் விசாரணையை தொடங்கி உள்ளது. தேவராஜனுக்கு ஷோபனா என்ற மனைவியும், அஸ்வதி என்ற மகளும், அனூப் என்ற மகனும் உள்ளனர்.

Tags : Government hospital ,Kerala ,Corona , Government hospital in Kerala transforms dead body in Corona
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...