×

தடய அறிவியல் துறை அதிகாரி பதவிக்கான சான்றுகளை பதிவேற்றம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:
தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அதிகாரி பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான முறையே முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 7ம் தேதி முதல் 14ம் தேதி மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில் தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி, அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் அரசு இசேவை மையங்களின் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Forensic Science Officer , Evidence for the post of Forensic Science Officer can be uploaded: DNPSC Notice
× RELATED முறைகேடு நடப்பதாக தடய அறிவியல் துறை...