×

ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டுவீட்

டெல்லி: ஜூலை 2021-க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,49,373 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,01,782 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 55,09,966 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 9,37,625 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனாவால் பாதித்த வண்ணம் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பல முக்கிய பிரபலங்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டிவிட்டர் பக்கத்தில்; ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும். தடுப்பூசியின் அனைத்து அம்சங்களையும் ஆராய உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசியை எவ்வாறு உறுதி செய்வது என்பது தான் எங்களின் முன்னுரிமை ஆகும் என பதிவிட்டுள்ளார்.

Tags : Harshwardhan ,Corona , Makka, Corona Vaccine, Minister Harsh Vardhan
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...