×

கேத்தி பாலாடா பகுதியில் நீரோடையில் குவியும் மதுபாட்டில்கள்

குன்னூர்: குன்னூர் அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் நீரோடையில் வீசப்படும் மதுபாட்டில்களால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கேத்தி பாலாடா பகுதி. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தின் வழியே ஒடும் நீரோடையின் நீர் காட்டேரி அணையை சென்றடைகிறது. நீரோடையின் கரையில் சுமார் 10க்கும் மேற்பட்ட கேரட் கழுவும் இயந்திரங்கள் இயங்குவதால் தினமும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் கேரட் கழுவும் பணிக்கு, லாரிகளில் கேரட் மூட்டைகளை ஏற்றும் பணிக்கு வந்து செல்கின்றனர்.

இவர்களில் பலர் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுவை வாங்கி கரையோரத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு, பாட்டில்களை நீரோடையில் வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுபாட்டில்களை உடைத்து நீரோடைக்குள் வீசுவதால், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவை விவசாயிகள் காலில் குத்தி காயங்கள் ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கேத்தி காவல்துறையினர் கேத்தி பாலாடா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு நீரோடைகளில் மதுபாட்டில்களை வீசுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : stream ,area ,Kathy Balada , Kathy Balada, Stream, Liquor Bottles
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...