×

திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம்: முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், விஜய்க்கு பதவி: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், விஜய் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டது. திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்டதிட்ட விதியின்படி, ராஜகண்ணப்பன், தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராகவும், வேலூர் ஞானசேகரன், டாக்டர் விஜய், புதுக்கோட்டை பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாகவும்; புதுக்கோட்டை பி.டி.அரசகுமார் தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள். ஏ.ஜி.சம்பத், தீர்மானக்குழுச் செயலாளராகவும்; மு.முத்துசாமி, தீர்மானக்குழு இணைச் செயலாளராகவும்; ஆ.நாச்சிமுத்து, கோவை எம். வீரகோபால் ஆகியோர் தீர்மானக் குழு உறுப்பினர்களாகவும்; வேதாரண்யம் எஸ்.கே.வேதரத்தினம், குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் திமுக விவசாய அணி இணைச் செயலாளர்களாகவும்; அன்னியூர் சிவா, திமுக விவசாய அணி துணைச் செயலாளராகவும்; திருவண்ணாமலை டாக்டர் எ.வ.வே.கம்பன், திமுக மருத்துவ அணி துணைத் தலைவராகவும்; விழுப்புரம் டாக்டர் இரா.இலட்சுமணன், திமுக மருத்துவ அணி இணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

திருவொற்றியூர் ஆர்.பத்மநாபன், திமுக மீனவர் அணி செயலாளராகவும்; தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டணம் துறைமுகம் சி.புளோரன்ஸ், திமுக மீனவர் அணி துணைச் செயலாளராகவும்; சென்னை அடையாறு ஷபீல், திமுக சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணைச் செயலாளராகவும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில் ராஜகண்ணப்பன், விஜய் ஆகியோர் முன்னாள் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK ,Rajakannanpan ,Leadership Executives ,General Secretary ,Vijay ,Duraimurugan Announcement , DMK, Administrators, Appointment
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி