×

வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதனுக்கு கொரோனா

சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். மக்கள் நலப்பணியில் ஈடுபடும் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எம்பி, எம்எல்ஏக்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அண்மையில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இருவரும் வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக இருமல் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை கொளத்தூர் ஜவஹர்நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இவர் தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,MLA ,DMK ,constituency ,Ranganathan ,Villivakkam , Villivakkam constituency, MLA Ranganathan, Corona
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா