வள்ளுவர் கோட்டம் பகுதியில் சாலை தடுப்பில் பைக் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு

சென்னை,: கோடம்பாக்கம் சிஆர்பி கார்டன் 3வது தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் அஜித்குமார் (19), தனது நண்பர் தி.நகர் ராமகிருஷ்ணாபுரம்  இ-பிளாக் திலக் தெருவை சேர்ந்த அஜயுடன் (20) நேற்று முன்தினம் இரவு வள்ளுவர் கோட்டம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

 அங்கு, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் பைக் வேகமாக மோதியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், அஜய்  படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அஜித்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போலீசார், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>