×

எச்1பி விசா வழங்கக் கூடாது அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை: இந்திய ஐடி துறையினருக்கு நிம்மதி

வாஷிங்டன்: எச்-1பி விசா வழங்க அதிபர் டிரம்ப் விதித்த இடைக்கால தடைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் மூலம், இந்திய  ஐடி துறையினருக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினர்கள் எச்1 பி விசா மற்றும் எச் 4 விசாக்களை பெற்று தங்கி  வருகின்றனர். இந்த விசாவை அதிகம் பயன்படுத்திக் கொள்வது இந்திய ஐடி துறையைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், கொரோனாவால் கடந்த ஜூன்  22ம் தேதி முதல் எச் 1 பி விசாவை வழங்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தார். அமெரிக்கர்களே வேலை இல்லாமல் இருக்கும்போது மற்ற  நாட்டினருக்கு எப்படி வேலை கொடுப்பது என்றும் அவர் கேட்டிருந்தார்.

அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவு இந்திய ஐடி துறையினருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அதே போல், அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப  நிறுவனங்கள், ‘டிரம்பின் இந்த கொள்கையால் வணிகங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும்’ என்று  எச்சரித்திருந்தனர்.இந்நிலையில், கலிபோர்னியாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்ப் உத்தரவை எதிர்த்து பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கை  நீதிபதி ஜெப்ரி ஒயிட் விசாரித்தார். இந்த கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய முக்கியமான நேரத்தில் தொழில்துறையை சிக்கலுக்கு  உட்படுத்துவதாகவும், மேலும் சட்ட விதிகளுக்கு முரண்பட்டதாகவும் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தனது 25 பக்க தீர்ப்பில், ‘குடியுரிமை அல்லாத வெளிநாட்டினரின் வேலை வாய்ப்பு  தொடர்பாக உள்நாட்டு கொள்கையை உருவாக்குவதில் அதிபருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் குடியேற்றக்  கொள்கையை அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. அதிபருக்கு அல்ல. எனவே, அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவு, அவரது  அதிகாரத்திற்கு அப்பாற்ப்பட்டது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது’’ என நீதிபதி கூறி உள்ளார்.இந்த உத்தரவு இந்திய ஐடி துறையினருக்கும், அமெரிக்க, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக  கருதப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கொலம்பியா நீதிமன்றம் இதே விவகாரத்தில் தடை விதிக்க தனக்கு அதிகாரமில்லை என  உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை அல்லாத வெளிநாட்டினரின் வேலை வாய்ப்பு தொடர்பாக உள்நாட்டு கொள்கையை உருவாக்குவதில் அதிபருக்கு கட்டுப்பாடற்ற  அதிகாரத்தை வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் குடியேற்றக் கொள்கையை அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

Tags : court ,Trump ,US ,Indian , H1B visa should not be issued At the behest of President Trump US court bans: Indian IT industry relieved
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்