×

அரசு போக்குவரத்து பணிமனையை டிரைவர்கள், கண்டக்டர்கள் முற்றுகை: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு பணிமனையை டிரைவர்கள், கண்டக்டர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, பொது போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில், பயணிகள் மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பயணிகள் கையை கழுவிவிட்டு சமூக இடைவெளியோடு 30 சதவீதம் பேரை மட்டும் பஸ்களில் ஏற்றி செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு நியந்தனைகளுடன் பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை.

இதனை கண்டித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 200க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள், நேற்று காலை செங்கல்பட்டு அரசு பணிமனை முன்பு திரண்டனர். அப்போது, திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அதிகாலை முதல் செங்கல்பட்டு பணிமனையில் இருந்து ஒரு பஸ்சும் இயங்கவில்லை. இதையொட்டி, வேலைக்கு செல்லும் அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போதுமான அளவு பஸ்களை இயக்க வேண்டும் என அரசு அறிவித்தது. ஆனால் செங்கல்பட்டு பணிமனையில் பயணிகள் வசதிக்காக போதுமான பஸ்களை இயக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பணி  தரக்கூடாது என்பதற்காக எங்களை வரவழைத்து, மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்புகின்றனர். பின்னர், வருகை பதிவேட்டில் நாங்களே விடுப்பு எடுத்ததாக பதிவு செய்து, ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனர். பயணிகளை, பஸ் முழுவதும் ஏறும்வரை காத்திருக்க வைத்து, உரிய நேரத்தில் எங்களை பஸ்சை இயக்கவிடாமல் கட்டாயப்படுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு பணிமனை தவிர மற்ற பணிமனைகளில் அனைவருக்கும் தினப்படி 100 முதல் 200 வரை வழங்கப்படுகிறது. அதையும் வழங்காமல் எங்களை வஞ்சிக்கிறார்கள் என்றனர்.

Tags : Siege ,Drivers ,Conductors ,Government Transport Workshop ,Chengalpattu , Siege of Government Transport Workshop by Drivers and Conductors: Tensions in Chengalpattu
× RELATED தாசில்தார் அலுவலகம் முற்றுகை