×

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவோர் சுயஉறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்ய கால அவகாசம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவோர் சுய உறுதிமொழி ஆவணத்தை தாக்கல் செய்ய பிப்.28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்களால் சுயஉறுதிமொழி ஆவணம் உரிய காலத்தில் தாக்கல் செய்ய இயலாத சூழல் உள்ளது.

செப்டம்பர் முதல் பிப்ரவரி 2021 வரையிலான ஆறு மாத காலத்துக்கு சுய உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்ய வேண்டிய பயன்தாரர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள்) பிப்ரவரி 28ம் தேதி வரையில் சுய உறுதிமொழி ஆவணத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி பயன்தாரர்கள் சுயஉறுதிமொழி ஆவணத்தை பிப்ரவரி 28ம் தேதிக்குள் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தாக்கல் செய்து கொள்ளலாம். சுயஉறுதி மொழி ஆவணத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Unemployment benefit recipients , Scholarship, Self Assurance Document
× RELATED சோதனை சாவடிகள் அமைத்து தீவிர...