×

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் மாநகராட்சி ஆணையர் கட்சிகளுடன் ஆலோசனை: 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை : ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியை நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 15ம் தேதி வரை நடக்கிறது. இதன்படி 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். தொடர்ந்து, நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது ஜனவரி 5ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு  ஜனவரி 15ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் பட்டியல் சுருக்க திருக்கம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


Tags : Voter List Summary Amendment Consultation ,Corporation Commissioner Parties , Voter List Summary Amendment Consultation with Corporation Commissioner Parties: Release of Draft Voter List on 16th
× RELATED பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில்...