×

அதிமுக எத்தனை செயற்குழு, பொதுக்குழு கூட்டினாலும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவே முடியாது : தங்கதமிழ்செல்வன் அதிரடி

ஆண்டிபட்டி, : எத்தனை செயற்குழு, பொதுக்குழு கூட்டினாலும் அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் திமுக கூட்டணி சார்பில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் பங்கேற்ற திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எத்தனை செயற்குழு, பொதுக்குழு கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவே முடியாது. அறிவிக்கும் துணிச்சல் அவர்களிடம் இல்லை. திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவரை முன்னிலைப்படுத்திதான் நாங்கள் பிரசாரம் செய்வோம். அவர்தான் அடுத்த முதல்வராக வருவார். இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி புரிகின்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. அதிமுகவில் துணிச்சலான ஆளுமை இல்லாததால் பொதுக்குழு கூடினாலும், செயற்குழு கூடினாலும் முதல்வர் வேட்பாளரை அவர்களால் அறிவிக்க முடியாது’’ என்றார்.



Tags : candidate ,executive ,committees ,AIADMK ,Chief Ministerial , AIADMK chief ministerial candidate Thangathamilselvan, Action
× RELATED பெரம்பலூரில் 11ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்