×

இடி தாக்கி மரம் பிளந்தது

பெரம்பூர்: சென்னையில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர்  தேங்கியது. மேலும் பலத்த இடி இடித்தால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. வியாசர்பாடி சஞ்சய் நகரில் இடி தாக்கியதில் தென்னை மரம் ஒன்று பாதியாக பிளந்தது. அதே பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்  சாதன பொருட்கள் பழுதடைந்தன.

மின்சாரம் தடைபட்டது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் குறைந்த மின்னழுத்த  குறைபாடு உள்ளதால் அடிக்கடி மழை நேரங்களில் இடி இடித்தால் மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. மின்வாரியம்  இதற்கு  நிரந்தர தீர்வு காண  வேண்டும்,’’ என்றனர்.

Tags : tree split , The thunder struck and the tree split
× RELATED சென்னை கூவம் ஆற்றின் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு