×

சென்ட்ரல்-திருவனந்தபுரம், மங்களூர் இடையே சிறப்பு ரயில்

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல்- திருவனந்தபுரம்- சென்ட்ரல் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் (02623, 02624) 27ம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், ஆவடி, காட்பாடி, கோவை, கொல்லம் வழியாக மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும், திருவனந்தபுரத்தில் இருந்து 28ம் தேதி  மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். சென்ட்ரல்- மங்களூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் ( 02601, 02624) 28ம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்ைட, சேலம், ஈரோடு வழியாக மங்களூர்க்கு மறுநாள் பிற்பகல் 12.10 மணிக்கு சென்றடையும்.

அதைப்போன்று மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 5.35 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் 27ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- மைசூர்- சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் (06021, 06022) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.

Tags : Central-Thiruvananthapuram ,Mangalore , Special train between Central-Thiruvananthapuram and Mangalore
× RELATED நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்