தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம் : முதல்வர், துணை முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு: தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான திரு. விஜயகாந்த் அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் விழைகிறேன்! என்றார்.

இதே போல் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த்.அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம்,திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர், தெலங்கானா

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற வேண்டுமென எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>