×

வேளாண் சட்டங்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படத் துப்பில்லாத அரசு! : திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!!

டெல்லி :  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் மசோதாக்களை இரு அவைகளிலும் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு பல்வேறு மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய மசோதாக்கள் சட்டமானால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலையும் கிடைக்காது. சந்தை விலையை விட குறைவான விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யும் சூழல் ஏற்படும். ஒட்டுமொத்தமாக விவசாயத்துறையை நலிவடையச் செய்துவிடும். விவசாயத்துறையை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சி.சந்தையை கார்ப்பரேட்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தும் சூழல் ஏற்படும். யார் நம்பிக்கைக்குரிய வர்த்தகர் என்பதில் சிக்கலை ஏற்படுத்தும். பெரு விவசாயிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்கி வைக்க வாய்ப்பு ஏற்படும்.சிறு விவசாயிகளின் நிலை பெரிதும் பாதிக்கப்படும் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்க்கிறோம்.இந்த மசோதாக்கள் மூலம் கார்ப்பரேட்கள் மட்டுமே பயன்பெறுவர். ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இந்த மசோதாக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.இதுதொடர்பான அறிக்கை அளிக்கும்படி அவர்களிடம் கூறியுள்ளோம். அதனை ஆராய்ந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு!
இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே! மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு; சொந்த நலன் தவிர வேறு சுரணையற்ற அரசு; வேளாண் சட்டங்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படத் துப்பில்லாத அரசு! என்று தெரிவித்துள்ளார்.


Tags : government ,Stalin ,DMK , Agricultural Laws, Concern, DMK, Chairman, Stalin, Condemnation
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...