×

பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர் சிறுமியின் வாழ்க்கையை வீணடிக்கலாமா? : பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாஜி அதிமுக எம்எல்ஏவுக்கு நீதிபதி கேள்வி!!

மதுரை : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் கிளை மறுத்துள்ளது.அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன். 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இவர் உள்பட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் நாஞ்சில் முருகேசன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘கடந்த 2017ம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில், அப்போதெல்லாம் என்மீது எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, சிறுமியின் வாழ்க்கையை வீணடிக்கலாமா, என்று கேள்வி எழுப்பினார். பின்னர் மனு மீதான  விசாரணையை அக்.6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : someone ,Judge ,AIADMK , Girl, Sex, Harassment, Former AIADMK, MLA, Judge, Question
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...