எட்டயபுரம் அருகே தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும் மின்மோட்டார் சுவிட்ச்: பொதுமக்கள் புகார்

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் பஞ்சாயத்தை சேர்ந்த பிதப்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டியும் அதனையொட்டி மின்மோட்டார் சுவிட்ச் பெட்டியும் உள்ளது. பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் மின்மோட்டாரை பயன்படுத்தி தொட்டியில் நீரை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின்மோட்டார் சுவிட்சை தொட்டால் கரண்ட் ஷாக் அடிக்கிறது. இதனால் மின்மோட்டாரை இயக்க அருகில் கிடக்கும் காய்ந்த குச்சியை பயன்படுத்தி மோட்டாரை கிராம மக்கள் போடுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த நிலை தொடர்கிறது. இது குறித்து பல முறை இளம்புவனம் பஞ்சாயத்து செயலாளரிடம் தெரிவித்தும் பயனில்லை. எனவே மின் விபத்து ஏற்படும் முன்பு மோட்டார் சுவிட்ச் பெட்டியை மாற்றவேண்டும், மேலும் பிதப்புரம் தெருக்களில் 6 தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் இருளில் நடந்த செல்ல வேண்டியுள்ளது, எனவே அதனையும் மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: