×

ஏரியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: திருப்பத்தூர் அருகே சுகாதார சீர்கேடு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சேலம் கூட்ரோடு பகுதியில் அந்தனேரி ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த ஏரியில் தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த ஏரியையொட்டி கலைஞர் நகர், அண்ணாநகர், தில்லை நகர், பெரியார்நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்கள்  உள்ளன. திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் தூய்மைப்பணியாளர்களால் அந்தனேரி ஏரியில் கொட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நகராட்சி சார்பில் பஊச நகரில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தூய்மைப்பணியாளர்கள் குப்பைக்கழிவு மற்றும் மருத்துவக்கழிவுகளை அங்கே கொட்டாமல் நீர்நிலைகளில் கொட்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகளும் அந்தனேரி ஏரியில் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து ெபாதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, அந்தனேரி ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளை உடனடியாக அகற்றவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ தூய்மைப்பணியாளர்கள் இது போன்ற வேலைகளை செய்திருக்க வாய்ப்பில்லை. தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவக்கழிவுகளை கொட்டியிருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.



Tags : lake ,Tirupati , Medical waste dumped in the lake: Sanitary disorder near Tirupati
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு