×

வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றினால் நாடாளுமன்றம் எதற்கு? தேர்தல் எதற்கு?: அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்‍கு..!!

டெல்லி: வாக்கெடுப்பே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் எதற்கு? தேர்தல் எதற்கு? என்று டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். விவசாய மசோதாக்கள் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்த ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேர் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய அலுவல்களில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் உடனடியாக அவையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடியவிடிய தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். மழை, வெயில்,  ஆகியவற்றில் தங்கள் வசதிகளைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்ற வளாகத்திலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் தங்கள் வசதிக்காக எதையும் கேட்கவில்லை, ஜனநாயகத்துக்காகவும், அரசியலமைப்பு சட்டத்துக்காகவும் போராடி வருகின்றனர். விவசாயத்திற்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார். வேளாண் மசோதா போன்ற ஆபத்தான மசோதாக்களை முறையான வாக்கெடுப்பின்றி எப்படி நிறைவேற்றுவீர்கள்? வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் எதற்கு? தேர்தல் எதற்கு? சட்டத்தை இதுபோன்ற வலையில் கொண்டு வந்தால் எதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர்? என்று முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.


Tags : Parliament ,election ,Arvind Kejriwal , Why a referendum, a bill, a parliament? Why the election ?, Kejriwal
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...