×

ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்திய நிபுணர்களை பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் குறி வைக்கிறது; மக்களவையில் மத்திய அரசு தகவல்

டெல்லி: ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்தியர்களை பாகிஸ்தான் குறி வைக்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்திய நிபுணர்களை பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் குறிவைத்து வருகிறது, கடந்த 12 ஆண்டுகளில் அபிவிருத்தி திட்டங்களில் பணிபுரியும் பல இந்தியர்கள் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த வெளிவிவகார அமைச்சர் வி.முரளீதரன் கூறியதாவது; கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானம் 1267 ன் கீழ் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய நான்கு இந்திய நாட்டினரை பயங்கரவாதிகளாக காட்ட பாகிஸ்தான் முயன்றது.

இருப்பினும், 1267 தடைகள் குழு, அதன் உள் நடைமுறைகளின் அடிப்படையில், கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்திய நிபுணர்களை பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் குறிவைத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பணிபுரியும் பல இந்தியர்கள் கடந்த 12 ஆண்டுகளில் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உதவியுடன், பல இந்தியர்கள் சிறையிலிருந்து விடுவிக்கமுடிந்தது. கூடுதலாக, இந்திய தூதரகம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களும் தாக்கப்பட்டுள்ளன.

மே 2018 இல் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஏழு இந்திய பொறியியலாளர்களில் கடைசி நபர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டார். மேலும் தலிபான்கள் இந்த மாதத்தில் கட்டாரில் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தைகளை தொடங்கினர். 2019 பிப்ரவரியில் புல்வாமாவில் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை உலக சமூகம் கடுமையாக கண்டனம் செய்ததுடன், பல நாடுகள் பாகிஸ்தானுக்கு “அதன் பிரதேசத்தை எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று அழைப்பு விடுத்துள்ளன என கூறினார்.

Tags : Pakistan ,Indian ,professionals ,Afghanistan ,Lok Sabha , Pakistan targets Indian professionals working in Afghanistan in a variety of ways; Federal Government Information in the Lok Sabha
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...