×

தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை வாரம் அனுசரிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் செப். 30ம் தேதி வரை தூய்மை வாரம் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ரயில்வே சார்பில் தூய்மை வாரம் செப்டம்பர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு அனைத்து சிறிய, பெரிய ரயில் நிலையங்களிலும் ஊழியர்களால் துவங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ரயில் நிலையம், தண்டவாளங்கள், ரயில்வே காலனி உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்துதல் மற்றும் சுத்தம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகும்.

அந்த வகையில் தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் இந்த தூய்மை வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பெரம்பூரில் உள்ள ரயில்வேயின் டெலிகம்யூனிகேஷன், சிக்னல் பணிமனையில் இந்நிகழ்ச்சி நடந்தது. இதில், முதன்மை தலைமை பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Southern Railway , Cleanliness Week Adjustable on behalf of Southern Railway
× RELATED பாமக சார்பில் நலத்திட்ட உதவி