×

சாத்தான்குளம் அருகே வாலிபர் கொலை விவகாரம் கைதுக்கு பயந்து இன்ஸ்பெக்டர் ஓட்டம்: அதிமுக நிர்வாகி உள்பட இருவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

திசையன்விளை: சாத்தான்குளம் அருகே வாலிபர் கொலையில் கைதுக்கு பயந்து இன்ஸ்பெக்டர் தப்பி ஓடிவிட்டார். அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 2 பேரை  பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த டேங்கர் லாரி தண்ணீர் விற்பனையாளர் செல்வன் (35). இவருக்கும்  அதிமுக மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திருமணவேலுக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது. கடந்த 17ம் தேதி செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டார். தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து வழக்கு நெல்லை மாவட்டம், திசையன்விளைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில்  தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் ஆகியோரை கைது செய்யக் கோரி நேற்று முன்தினம் செல்வத்தின் மனைவி ஜீவிதா மற்றும் அவரது உறவினர்கள், திசையன்விளை போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்–்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் கைது செய்யப்படுவோம் என பயந்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார்.

மேலும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆலய மணி அடித்து போராட்டம்: கொலையான செல்வனின் சொந்த ஊரான சொக்கன்குடியிருப்பில் நேற்று மதியம் 1 மணியளவில் ஆலய மணி அடித்து ஊர் மக்கள் அங்குள்ள தனிஸ்லாஸ்  ஆலயம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகும் செல்வன் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். கைதுக்கு பயந்து இந்த பணியிடத்திலும் அவர் சேரவில்லை என தெரியவந்துள்ளது. z

Tags : Inspector ,arrest ,Sathankulam ,AIADMK ,executive ,organization , Sathankulam, Valipar murder, Inspector flow, personal organization
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு