×

சிறப்பாசிரியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கோபி: சிறப்பாசிரியர்களை பணி நிரந்தம் செய்ய வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சிறப்பாசிரியர்களுக்கு பணி வழங்கும்போதே தற்காலிக ஆசிரியர்கள் என்று மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. கொரோனா காலத்துக்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். நீட் தேர்வில் 90 சதவீத கேள்விகள் மாநில அரசு பாடத்திட்டத்தின் மூலம்தான் கேட்கப்பட்டுள்ளது. எனவே, எத்தனை போட்டி தேர்வு வந்தாலும் அதை எதிர் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

கல்வி தொலைக் காட்சி மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஔிபரப்பு செய்யப்படும். அப்போது மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். பாடத்திட்டம் குறைப்பு குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Tags : authors ,announcement ,Senkottayan , Special editors do not have job permanence: Minister Se
× RELATED பணி பாதுகாப்பு கேட்டு