×

கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை

கொடைக்கானல்: கொரோனா ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த வாரம் முதல் சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் சென்று வர அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்தும், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்று வரவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு இன்று முதல் வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வரலாம் என சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், செட்டியார் பூங்காவை தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்கா இன்று முதல் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.Tags : Kodaikanal , No need for e-pass from today to go to Kodaikanal
× RELATED நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற...