×

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் மோசடி வாலாஜாபாத் வாலிபர் கைது: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
இதுகுறித்து கலெக்டர் பொன்னையா கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விண்ணப்பித்த 42,382 பெயர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலை சரிபார்த்தபோது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2712 பேர், முறைகேடாக சேர்க்கப்பட்டு, அதன்மூலம் 78 லட்சம் பெற்றனர் என தெரிந்தது.
இதைதொடர்ந்து, முதல்கட்டமாக 59 லட்சம் பறிமுதல் செய்து, பிரதம மந்திரி கிசான் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்பட்டது. மீதமுள்ள தொகை குறிப்பிட்டவர்களிடம் இருந்து வசூல் செய்து, மீண்டும் பிரதம மந்திரி வங்கி கணக்கில் சேர்க்க தயாராக உள்ளது.

இதுவரை போலி விவசாயிகளிடம் இருந்து 78 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வேறு மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதை ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்கில் பணம் இருந்தால் நேரடியாகவே எடுக்கிறோம். இல்லாவிட்டால், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அவர்களது வீட்டுக்கு சென்று, வசூல் செய்கிறோம். இதற்கிடையில், கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டதாக, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த சத்யராஜ் என்ற வாலிபரை, கம்ப்யூட்டர் மையம் அருகே சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மூலம், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.  இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Collector ,Walajabad ,Kisan , Walajabad youth arrested for fraud in PM's Kisan scheme: Collector
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...