×

நெட் தேர்வு ஒத்தி வைப்பு

சென்னை: கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடக்கும் நாளில் வேறு ஒரு தேர்வு நடப்பதால் நெட் தேர்வு 24ம் தேதி தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் மூலம் இந்திய வேளாண்மைக் கழகத்தின் தேர்வு செப்டம்பர் 16,17 மற்றும் 22ம் தேதிகளில் நடத்துகிறது. அதே நாளில் தேசிய தகுதித் தேர்வும் நடக்கிறது. இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். அதனால், தேசிய தகுதித் தேர்வை 24ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் சதனா பிரசார் தெரிவித்துள்ளார். 


Tags : NET Exam Postponement
× RELATED முதுகலை மருத்துவ மாணவர் மர்ம மரணம்...