×

கன்னட திரையுலகில் புயலை கிளப்பிய போதை மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகனை பிடிக்க அதிகாரிகள் தீவிரம்

பெங்களூரு: கன்னட திரையுலகில் புயலை கிளம்பியுள்ள போதை மருந்து வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யாவின் பெங்களூரு பண்ணை வீட்டில் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். போதை மருந்து வழக்கில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜின் மகனும், இந்தி நடிகர் விவேக் மைத்துனருமான ஆதித்யா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

அவரை தேடி மும்பை, டெல்லி, கோவா உள்ளிட்ட இடங்களுக்கும் தனி படையினர் விரைந்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு அருகே ஹெபல் பகுதியில் உள்ள ஆதித்யா ஆல்வாவின் பண்ணை வீட்டிற்கு காலையில் சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சொகுசு பங்களா போன்று காட்சியளிக்கும் இந்த பண்ணை வீட்டில் நடிகை, நடிகர்களுடன் சேர்ந்து ஆதித்யா ஆல்வா கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் பண்ணை வீட்டிலிருந்து போதைப் பொருள் விநியோகம் நடைபெற்றதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.


Tags : storm ,Jeevaraj Alva ,Kannada , Kannada film storm, drug case, son of former minister Jeevaraj Alva, serious
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...