சிசோடியாவுக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் சிசோடியாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், நேற்றைய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையே காய்ச்சல் காரணமாக அவர் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி  செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். சமீபத்தில் அவரை சந்தித்தவர்களும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

Related Stories:

>