×

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா நம்பர்-1: பிரேசிலை முந்தியது; பாதிப்பு 48 லட்சம் தாண்டியது

புதுடெல்லி: உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் பிரேசிலை முந்தி இந்தியா நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது.  அதே சமயம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரசின் தீவிரம் இந்தியா  தவிர மற்ற நாடுகளில் படிப்படியாக குறைந்து வருகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும்  உள்ளது. இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்கும் அதே சமயம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், குணமடைவோர்  எண்ணிக்கையில் இந்தியா நேற்று நம்பர்-1 இடத்தை பிடித்தது. அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலை புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 37  லட்சத்து 80,107 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், 37 லட்சத்து 23,206 பேர் குணமடைந்து பிரேசிலை முந்தி உள்ளது.

உலக அளவில் மொத்தம் 2 கோடியே 90 லட்சத்து 6,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1 கோடியே 96 லட்சத்து 25,959 பேர் கொரோனா  பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 9 லட்சத்து 24 ஆயிரத்து 105 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 24 லட்சத்து 51 ஆயிரத்து 406 பேர்  குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 78% அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் 77 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி  வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி  எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் 92,071 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு  48 லட்சத்து 46,427 ஆக அதிகரித்துள்ளது. இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 1,136 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை 79 ஆயிரத்து 722 ஆக  அதிகரித்துள்ளது. இதுவரை 37.8 லட்சம் ேபர் நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தற்போது 9 லட்சத்து 86 ஆயிரத்து 598 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ெவளியீட்டுள்ள அறிக்கையின் படி, நாடு முழுவதும் இதுவரை 5 கோடியே 72 லட்சத்து 39,428  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 7,930 பேர் புதிததாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
* தற்போது ஒருநாள் பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
* 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 32 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஜூலை 28ம் தேதிக்குப் பிறகு அமெரிக்காவில் 44  சதவீத தினசரி பாதிப்பு குறைந்து விட்டது. பாதிப்பு குறையாத ஒரே நாடு இந்தியா.

Tags : India ,survivors ,Corona ,Brazil , India No. 1 globally in number of survivors from Corona: ahead of Brazil; The impact exceeded Rs 48 lakh
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்