×

பிளாஸ்டிக் குடோனில் தீ

ஆவடி: அயப்பாக்கம் அபர்ணா நகர் சரஸ்வதி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். அதே பகுதி செல்லியம்மன் கோயில் தெருவில் பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து குடோனை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதிலிருந்து வெளியேறிய கரும்புகை குடியிருப்புக்களில் புகுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் அவதிப்பட்டனர். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் 2 மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், குடோனில் இருந்த சுமார் ₹4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Plastic, cotton, fire
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...