×

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்தியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து: அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என நம்புகிறேன்

டெல்லி: நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்தியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் திட்டமிட்டபடி இன்று நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி நடைபெறுகிறது. மாணவர்கள் இரண்டரை மணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஜேஇஇ ஐப் போலவே, அனைத்து மாணவர்களும் கொரோனா வழிகாட்டியைப் பின்பற்றி முழுமையான பொறுமை, சுய கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையுடன் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, நம்பிக்கையுடன் தேர்வு எழுத வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்திய அரசு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் படி அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன, இந்த ஏற்பாடுகளை செய்த அனைத்து மாநிலங்களுக்கும் எனது நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

Tags : Ramesh Pokri , NEED EXAMINATION, STUDENTS, GREAT, by Union Minister Ramesh Pokri
× RELATED சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...