×

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்

டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 16 லட்சம்  மாணவ, மாணவியர் வரை தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு நடந்த பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விடைத்தாள் திருத்தும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று முன்தினம் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதும் 15-ம் தேதி இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார். அதன்படி, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் சிபிஎஸ்இ இணைய தளமான http://cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Ramesh Pokri ,CBSE ,Central Human Resource Development , CBSE Class 10 results released: Central Human Resource Development Minister Ramesh Pokri tweeted
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...