×

ரூ300 கட்டண தரிசனம்: திருப்பதியில் கூடுதலாக 3,000 டிக்கெட் விற்பனை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக  கடந்த ஜூன் 11ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது ₹300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். 30ம் தேதி வரை இந்த டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனு மதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் 3 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த டிக்கெட்கள் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரூ300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் ஒரு நாளைக்கு கூடுதலாக 3,000 டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் கோட்டா வெளியீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக தினந்தோறும் ரூ300 சிறப்பு தரிசனத்தில் 13,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

ரூ1.18 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது வரும் 30ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் மூலம் ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 10,239 பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலில் நேற்று முன்தினம் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ1.18 கோடி கிடைத்தது.


Tags : Tirupati ,Darshan , Rs 300 fare Darshan, Tirupati, ticket sales
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது