சென்னையில் மூன்று நாட்களில் மெட்ரோ ரயிலில் 24,354 பேர் பயணம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையி்ல் மூன்று நாட்களில் 24,354 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 7ம் தேதி முதல் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரலுக்கு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 9ம் தேதி காலை 7 மணி முதல் துவங்கியது.

தற்போது மெட்ரோ ரயில் தன் சேவைகளை நேற்று முதல் காலை 7 மணி முதல் 9 மணி வரை நீட்டித்துள்ளது. மேலும் கடந்த 7ம் தேதி முதல் கடந்த மூன்று நாட்களில் மொத்தம் 24,354பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

திறன் அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,769 பயணிகள் மற்றும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 637 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் மட்டும் ரயிலில் மொத்தம் 13,980 பயணிகள் பயணம் செய்துள்ளனர். திறன் அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 11,091 பயணிகள் மற்றும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 325 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>